உங்க குழந்தைகளுக்கு வாக்கர் பயன்படுத்துறீங்களா? உடனே நிறுத்திவிடுங்கள், எச்சரிக்கும் நிபுணர்கள்!!!
பொதுவாகவே, குழந்தைகள் ஏற்ற காலத்தில் அவர்களாகவே செய்வார்கள். ஆனால் பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் பயத்தினால், குழந்தைகளை ஊக்கபடுத்துவதாக நினைத்து, அவர்களை தொந்தரவு செய்து விடுகிறோம். அந்த வகையில், பெற்றோர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று, குழந்தைகள் நடக்க தயாராவதற்கு முன்பே, அவர்களை நடக்க வற்புறுத்துவது தான். இயல்பாகவே குழந்தைகள், ஒருவயது தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு நடைபயில ஆரம்பிப்பார்கள். இதற்காக நமது முன்னோர், நடைவண்டியை கொடுத்து குழந்தைகளை பழக்கினார்கள்.
இந்த நடைவண்டி வாக்கரை போன்று அல்ல, இதில் பழகும் போது குழந்தைகள் விழுவதும் எழுவதும் அழுவதுமாய் தான் இருப்பர்கள். ஆனால் இதன் மூலம் குழந்தைள் விழுவதும் எழுவதும் என்னும் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை, குழந்தை உட்கார ஆரம்பித்த உடனே வாக்கரில் உட்கார வைத்து விடுகிறோம். இப்படி சற்றும் பொறுமை இல்லாமல், குழந்தையை விரைவில் நடைபயிற்சிக்கு பழக்குவதால் குழந்தை திணறுகிறது. அது மட்டும் இல்லாமல், நீங்கள் பாதுகாப்பானதாக நினைக்கும் வாக்கர், குழந்தையின் தசை வலுவையும், இடுப்பு வலுவை குறைப்பதோடு பிறகு நடை பழகுவதை தாமதப்படுத்துகிறது.
குழந்தைகள் வாக்கரில் அமர்த்தும் போது, அவர்கள் பாதம் முழுவதையும் தரையில் வைத்து நடப்பதில்லை. மாறாக, கட்டைவிரலை மட்டுமே பயன்படுத்தி நடப்பார்கள். இதனால் குழந்தையின் கால் தசைகள் இறுகி, கால்களில் இருக்கும் அடிப்பகுதி தசைகள் மட்டுமே வலுப்படுத்த படுகிறது. அது மட்டும் இல்லாமல், குழந்தை வாக்கரில் வேகமாக வரும் போது, படிக்கட்டில் உருண்டு விழுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. நடக்கும் போது இடுப்பில் இருந்து கால்கள் வரை இருக்கும் தசைகள் வலுப்படுவது தான் ஆரோக்கியம். ஆனால் அது கண்டிப்பாக வாக்கரில் எதிர்பார்க்கமுடியாது. இதனால் வாக்கர் பயன்படுத்தும் குழந்தைகள் வளர்ந்த பிறகு, அதிகளவு கீழே விழுவார்கள். இதைதான் குழந்தை மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
Read more: பொரி சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை குறையுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..