முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த விஷயம் தெரியாம இனிமேல் பாகற்காய் சாப்பிடாதீங்க.! மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுமா.?

05:50 AM Dec 03, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கசப்பு சுவையுடைய பாகற்காய் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நம் உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முதன்மையானது. எனினும் எந்த பொருளுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பாகற்காயும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு தொகையான தீமைகள் ஏற்படுகின்றன. அவை என்ன என்று பார்ப்போம்.

Advertisement

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் பாகற்காய் கல்லீரலுக்கு பல வகையான தீமைகளை கொண்டிருக்கிறது. பாகற்காயில் இருக்கக்கூடிய சேர்மங்கள் கல்லீரலின் உட்புறத்தில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவை நேரடியாக விளைவுகளை வெளிப்படுத்தாமல் நாள்பட்ட நிலையில் வெளிப்படுத்துவதால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையும் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாகற்காய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாகற்காய் அதிக அளவில் சாப்பிடும் போது அதில் இருக்கக்கூடிய வேதி பொருட்களின் காரணமாக இதயத்தில் சீரற்ற ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இதனால் மார்பில் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கு காரணமாக அமைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இதய நோய் இல்லாத ஒருவருக்கு பாகற்காய் ஜூஸ் கொடுத்து அவரது இதயத்துடிப்பை பரிசோதித்துப் பார்த்தபோது அது சீரற்ற முறையில் வேகமாக துடித்ததை ஆய்வுகள் உறுதி செய்து இருக்கிறது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகமாக பாகற்காய் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனினும் இதனைப் பற்றி முழுமையான ஆய்வு முடிவுகள் இல்லை. மேலும் சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை சாப்பிடும் போது பாகற்காயில் இருக்கும் மூலப் பொருட்கள் நீரிழிவுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளின் வீரியங்களை குறைக்கிறது. மேலும் பாகற்காய் சில மருந்துகளை செயல் இழக்க வைக்கின்ற அபாயமும் இருக்கிறது. அதிகமான பாகற்காய் சாப்பிட்டு வர சிறுநீர் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
Bitter gourdDemeritsHealth issueshealthy lifevegetables
Advertisement
Next Article