For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி இருவரும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்காதது ஏன்? - பா.ரஞ்சித் ஆவேசம்

Demanding justice for Armstrong's death, a rally was held yesterday in Egmore, Chennai on behalf of film director Pa. Ranjith's Neelam Cultural Centre.
09:59 AM Jul 21, 2024 IST | Mari Thangam
மேயர் பிரியா  அமைச்சர் கயல்விழி  இருவரும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்காதது ஏன்    பா ரஞ்சித் ஆவேசம்
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், நேர்மையான முறையில் வழக்கை விசாரிக்க வேண்டும் என பதாகைகள் மூலமாகவும், முழக்கங்களை எழுப்பியும் வலியுறுத்தினர்.

Advertisement

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நினைவேந்தல் பேரணி நடத்திய இயக்குனர் ரஞ்சித் நேற்று பேசியபோது, 'நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல்வுடைவர்களாக மாறும் போது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும்;

மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் எப்படி உயர் பதவிகளுக்கு வந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரியாராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை. ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் வாய்ப்பு கிடைத்தது. மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை?. நீங்கள் திமுகவில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா"

ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று சமூக வலைதளங்களில் எழுதியவர்கள் அயோக்கியர்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று ஆவேசமாக பா ரஞ்சித் பேசினார்.

Read more ; பெண்களே.. ZOHO -வில் வேலை வேண்டுமா? வந்தாச்சு புதிய அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Tags :
Advertisement