For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : ரூ.500க்கு சிலிண்டர்.. இலவச மின்சாரம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்..!!

Delhi polls: Congress announces Rs 500 cylinder, 300 units of free electricity, ration if voted to power
01:42 PM Jan 16, 2025 IST | Mari Thangam
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்   ரூ 500க்கு சிலிண்டர்   இலவச மின்சாரம்   வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்
Advertisement

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர்கள், இலவச ரேஷன் மற்றும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Advertisement

டெல்லியில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டு முறை பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஆனால், மக்களவைத் தேர்தலில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜகவை பொருத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.

2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் சேர்ந்திருந்தன. ஆனாலும், சட்டப் பேரவைத் தேர்தல்களில் கூட்டணி அமைக்கப்படாமல் தனித்தனியாகத் தான் போட்டியிட்டன. இந்நிலையில், டெல்லியிலும் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாய் தேர்தலைக் களம் காணவுள்ளனர். இதனால், டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர்கள், இலவச ரேஷன் மற்றும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் வாக்குறுதிகள் : ஜனவரி 6 ஆம் தேதி, காங்கிரஸ் தனது 'பியாரி திதி யோஜனா' திட்டத்தை அறிவித்தது, அது ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 பண உதவி வழங்கப்படும். ஜனவரி 8 அன்று, கட்சி தனது 'ஜீவன் ரக்ஷா யோஜனா'வை அறிவித்தது, இதன் கீழ் ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்குவதாக உறுதியளித்தது. டெல்லியில் உள்ள படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு வருடத்திற்கு மாதம் 8,500 ரூபாய் வழங்கப்படும் என்றும் கட்சி உறுதியளித்தது.

Read more ; ஜீன்ஸ் அணிந்து தூங்கும் நபரா நீங்கள்..? கருவுறுதலை பாதிக்கும்..!! – மருத்துவர்கள் எச்சரிக்கை

Tags :
Advertisement