முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

DMK: பிரதமர் மோடிக்கு மிரட்டல்... திமுக அமைச்சர் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு...!

06:00 AM Mar 14, 2024 IST | 1newsnationuser2
Advertisement

பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

4 நாட்களுக்கு முன்பு சென்னை பல்லடத்தில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டியதாக தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் மீது டெல்லி போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சத்ய ரஞ்சன் ஸ்வைனின் புகாரின் அடிப்படையில், ஐபிசியின் ஐந்து பிரிவுகளின் (153, 268, 503, 505 மற்றும் 506) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரும், அமைச்சருமான தா.மோ‌ அன்பரசன், கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, நம் நாட்டின் பிரதமரை துண்டு துண்டாக வெட்டி விடுவேன் என வெளிப்படையாக மிரட்டினார். அன்பரசன் விடுத்துள்ள மிரட்டல், பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக உள்ளது. திமுக ஒழிக்கப்படும் என்று மோடி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் போதே அன்பரசன் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article