BJP: டெல்லி லீக்ஸ்!... அண்ணாமலை பார்முலா!... அமித் ஷா வியூகம் என்ன?... இறுதி பாஜக லிஸ்ட் இதுதான்!
BJP: பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து டெல்லியில் அமித் ஷாவுடன் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கழற்றிவிடப்பட்டுள்ளது. இதனால் பாஜக புதிய கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. தற்போது வரை பாஜக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்து வழங்கப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.இந்நிலையில் தான் தமிழ்நாடு பாஜக சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாஜகவின் 2வது கட்ட லிஸ்ட்டில் தமிழக வேட்பாளர்களின் பெயர்களை இடம்பெற வைக்கும் நோக்கத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களாக சென்னையில் பாஜக தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளை தவிர்த்து பிற தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யப்பட்டனர். பாஜக போட்டியிட உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.
இந்த வேட்பாளர் பட்டியலுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் டெல்லி சென்றனர். இந்நிலையில் தான் இரவில் அவர்கள் 2 பேரும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அந்த பட்டியலை வழங்கி விவாதித்து வேட்பாளர்களை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.