தலைநகரில் காற்று மாசு அளவு அதிகரிப்பு...! அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவு...!
தேசிய தலைநகரில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் 48 மணி நேரம் மூடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. குறித்து முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் அதிகரித்து வரும் மாசு அளவுகளின் வெளிச்சத்தில், டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகள் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் காற்று மாசு அளவுகள் மற்றும் GRAP III ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்க தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அனைத்து துறைகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
கூட்டத்தில் டெல்லிக்குள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மற்றும் அனைத்து சிஎன்ஜி, மின்சார லாரிகள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டீசல் மூலம் இயக்கப்படும் நடுத்தர வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் டெல்லியில் இயக்க தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.