டெல்லியில் பரபரப்பு.! விவசாயிகள் போராட்டத்தில் '21' வயது இளைஞர் சுட்டுக்கொலை.!
Farmers Protest: டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் இளம் விவசாயி ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மற்றும் கல்யாண மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் குறைந்தபட்ச கொள்முதல் விலை மின்சார மானியம் விவசாய ஓய்வூதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசின் நான்கு அமைச்சர்கள் அடங்கிய குழு விவசாய சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அரசின் கோரிக்கை சம்பந்தமாக விவசாய சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் தொடர்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த விவசாயிகள் இன்று மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து பேரணியாக டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகர் டெல்லியை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அணிவகுத்து செல்கின்றனர். இவர்களை தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 21 வயது சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்திருக்கிறார்.
டெல்லி எல்லையில் ரப்பர் குண்டு கழுத்தில் பாய்ந்ததால் விவசாயி உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.