இளைஞரின் குடலில் 3 செமீ நீளமுள்ள உயிருள்ள கரப்பான் பூச்சி..!! எப்படி உள்ளே நுழைந்தது?
டெல்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், எண்டோஸ்கோபியைப் பயன்படுத்தி, இளைஞனின் சிறு குடலில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றினர். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கூற்றுப்படி, 22 வயதான அவர் கடந்த 2-3 நாட்களாக கடுமையான வயிற்றுவலி மற்றும் உணவை ஜீரணிப்பதில் சிரமம் இருப்பதாக சிரமப்பட்டு வந்தார். அவரின் வயிற்று பகுதியில் 3 செ.மீ நீளமுள்ள கரம்பான் பூச்சி உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட்டது.
ஃபோர்டிஸ் மருத்துவமனையின் காஸ்ட்ரோஎன்டாலஜி மூத்த ஆலோசகர் டாக்டர் ஷுபம் வாத்ஸ்யா தலைமையிலான குழு, எண்டோஸ்கோபி மூலம் 10 நிமிடத்தில் பூச்சியை அகற்றியது. 3 செ.மீ அளவுள்ள, கரப்பான் பூச்சி நோயாளியின் சிறுகுடலில் உயிருடன் கிடப்பதாக டாக்டர் வாத்ஸ்யா கூறினார். கரப்பான் பூச்சி இறந்திருந்தால், அது சிதைந்திருக்கும். நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்று அவர் கூறினார்.
அறுவை சிகிச்சை எப்படி நடத்தப்பட்டது?
டாக்டர்கள் குழு கரப்பான் பூச்சியை எண்டோஸ்கோபிக் செயல்முறையின் மூலம் 10 நிமிடத்தில் அகற்றினர், இரண்டு விதமான எஸ்டோஸ்கோபி உள்ளது. ஒன்று உட்செலுத்தல் செயல்முறை, மற்றொன்று உறிஞ்தல் செயல்முறை. அவர்கள் எண்டோஸ்கோப்பில் உறிஞ்சும் செயல்முறையை பயன்படுத்தி கரம்பான் பூச்சியை வெளியே எடுத்தனர். நோயாளி உணவு உண்ணும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது நோயாளி தூங்கும் போது வாயில் நுழைந்திருக்கலாம். சரியான நேரத்தில் கரப்பான் பூச்சியை அகற்றவில்லை என்றால், இது தொற்றுக் கோளாறு மற்றும் மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என மருத்துவர்கள் குழு தெரிவித்தனர்.
உடலுக்குள் நுழையும் பூச்சிகள் எப்படி ஆபத்தானவை?
நிபுணர்களின் கூற்றுப்படி, கரப்பான் பூச்சிகள் ஒரு ஆபத்தான ஒவ்வாமை மூலமாகும் மற்றும் ஆஸ்துமாவை தூண்டும். உணவில் விட்டால் நோய்களுக்கு வழிவகுக்கும் சில பாக்டீரியாக்களையும் அவை சுமந்து செல்கின்றன. இருப்பினும், அவை உங்கள் உடலுக்குள் நுழைந்தால், அவை உயிருக்கு ஆபத்தானவை. ஒரு பூச்சி அதன் உடலில் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை சுமந்து செல்கிறது,
மேலும் நுழைவுப் புள்ளியில் ஒரு காயம் அல்லது கடி போன்ற தொற்று ஏற்படலாம், அல்லது அதை விழுங்கினால் மற்றும் அது எடுத்துச் செல்லும் பாக்டீரியா செரிமான அமைப்பில் வெளியிடப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்செயலாக உடலுக்குள் நுழையும் பூச்சிகளில் பெரும்பாலானவை இயற்கையான உடல் செயல்பாடுகளால் வெளியேற்றப்பட்டாலும், சில சிக்கிக் கொள்கின்றன.
Read more ; நீங்கள் வாங்கும் தங்கம் ஹால்மார்க் தங்க நகை தானா? எப்படிக் கண்டுபிடிப்பது? – முழு விவரம் உள்ளே..