மனைவியுடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக டெல்லியில் தொழிலதிபர் தூக்கு..!! தற்கொலைக்கு முன் எடுத்த வீடியோவால் அதிர்ச்சி
டெல்லியை சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் மத்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை கல்யாண் விஹாரில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முன் அவர் வெளியிட்ட 54 நிமிட வீடியோ குறிப்பு இணையத்தில் வைரலாகிறது.
புனித் குரானா 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்து கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புனித் மனைவியை விட்டு பிரிந்து தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர். தற்கொலைகு முன் இருவரும் சொத்து விவகாரம் குறித்து பேசிய 2 நிமிட ஆடியோவும் வைரலாகி வருகிறது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புனித் மன அழுத்தத்தில் இருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை மதியம் புனித் தூக்கில் தொங்கியதை அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. புனிதத்தின் மொபைலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். புனித் குரானாவும் தற்கொலைக்கு முன் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் இந்த வழக்கு கவனத்தை ஈர்த்தது. மேலும், 24 பக்கங்கள் கொண்ட தற்கொலைக் குறிப்பையும் எழுதி, வைத்ததாக கூறப்படுகிறது. வழக்கை தீர்ப்பதற்கு நீதிபதி ரூ.5 லட்சம் கேட்டதாகவும் அவர் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.