அலர்ட்... இந்த App உங்கள் மொபைலில் இருந்தால் மொத்த பணத்திற்கும் ஆப்பு..!! உடனே டெலிட் பண்ணிடுங்க..
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடி சமப்வங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. அந்த வகையில் ஆபத்தான செயலி குறித்த தகவலை சைபர் பாதுக்காப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிரிப்டோகரன்சியை திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயலியை, சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த செயலியை Play Store இலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு 5 மாதங்களுக்கும் மேலாக இது கண்டறியப்படாமல் இருந்தது. இது மார்ச் 2024 இல் Google Play Store இல் பதிவேற்றப்பட்டது. பல ஆண்ட்ராய்டு பயனர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ள செயலி WalletConnect Airdrop Wallet ஆகும். இது ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைக்கிறது.
கடந்த சில மாதங்களில் பலரை முதலீடு என்ற பெயரில் ஏமாற்றியுள்ளது. இந்த செயலியை உடனடியாக உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிவுறுத்தப்பட்டது. 5 மாதங்களில் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் $70,000 (சுமார் 58.6 லட்சம்) மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடியதாக அறிக்கை கூறுகிறது.
இது மட்டுமின்றி, அதன் மீதான போலியான விமர்சனங்களால், மக்களிடையே கவனம் பெற்றது. இந்த செயலியை இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஹேக்கர்கள் ஃபிஷிங் இணையதளங்கள் மற்றும் முறையான கிரிப்டோகரன்சி இயங்குதளங்களைப் பிரதிபலிக்கும் பயன்பாடுகளைப் பயன்படுத்தினர். இதன் காரணமாக புதிய பயனர்கள் அவர்களின் வலையில் சிக்கிக் கொள்வதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.