Ration Card | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா.? உணவு வழங்கள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.!
Ration Card: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழை மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களாக ஏழைகளுக்கு உணவு தானியங்கள் அரிசி போன்றவை வழங்கப்படுகிறது
இந்தத் திட்டத்தின் மூலமாக ஏராளமான ஏழை மக்கள் பயனடைந்தனர். எனினும் இந்தத் திட்டத்தில் பலர் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் எனக் கூறி பலரது பெயர்களையும் மத்திய அரசு ரேஷன் கார்டில் இருந்து நீக்கியது.
இதனால் பல மக்களுக்கும் ரேஷன்(Ration Card) பொருட்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பல புகார்கள் இருந்ததை தொடர்ந்து நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி உணவு வழங்கள் துறை அலுவலகத்திற்கு தகுந்த ஆவணங்களுடன் சென்று நீக்கப்பட்ட பெயர்களை சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.