டிகிரி போதும்.. மத்திய கல்வி வாரியத்தில் வேலை.. ரூ.1,12,000 வரை சம்பளம்..!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்றாகும். தற்போது கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், பணியிடங்களை நிரப்புவதற்கான அகில இந்திய போட்டித் தேர்வு மூலம் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான இந்திய குடிமக்கள்) விண்ணப்பதளர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்க வாரியம் அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வாரியத்தின் இணையதளம் https://cbse.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த முறையும்/விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை ஏற்கப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சிபிஎஸ்இ அலுவலகத்திலும் பணியமர்த்தப்படலாம்.
மேற்பார்வையாளர் காலியிடங்கள் : 142
சம்பள விவரம் : ரூ.35,400/- முதல் ரூ.1,12400/-
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்,
வயது வரம்பு : 18 – 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
இளநிலை உதவியாளர் காலியிடங்கள் : 70
சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
கல்வி தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
வயது வரம்பு : 18 – 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : விண்ணப்பங்களில் ஆன்லைன் பதிவு செய்வதற்கு 2.01.2025 முதல் 31.01.25 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வாரியத்தின் இணையதளமான https://cbse.gov.in ஐ பார்வையிடவும்.