தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வி..!! எடப்பாடிக்கு எதிராக உருவாகும் கொங்கு டீம்..!! கடைசியில இப்படி ஆகிடுச்சே..!!
ஜெயலலிதா மறைவுக்கு பின், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிக்கு பின் தமிழ்நாட்டில் வரிசையாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. 18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில், அங்கே பின்னடைவை சந்தித்தது. அதேபோல் மக்களவை தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தருமபுரியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி முன்னிலை பெற்றுள்ளார். இதுவரை தொடர்ந்து முன்னிலை பெற்றுவந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பின்னடைவை சந்தித்திருக்கிறார். மேலும், அதிமுக எங்கும் முன்னிலை பெறவில்லை. இதன் மூலம் 18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை சந்தித்து வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10-வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020இல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10-வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததால் அது அதிமுகவின் 10-வது தொடர் தோல்வியாக அமைந்துள்ளது. தென் மண்டலத்தில் வாக்குகளை இழந்தது, வடக்கு மண்டலத்தில் வலிமை இழந்தது, டெல்டாவில் பெரியளவில் சரிவை சந்தித்தது என்று அதிமுக கடுமையான தோல்வியை தழுவி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அதிமுக லோக்சபா 2024 தேர்தலில் பெரிய அளவில் இடங்களை குவிக்காது என்று கட்சி தலைமை தகவல்கள் சென்றுள்ளதாம். இதன் காரணமாகவே தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். வெற்றிபெற முடியாது என்று தெரிந்து புலம்பி இருக்கிறார்.
விரக்தியாக எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார். உங்களை எல்லாம் 4 வருடம் சம்பாதிக்க விட்டேன். ஆனால், நீங்கள் தேர்தலில் செலவே செய்யவில்லை. ஏன் இப்படி செய்தீர்கள், என்றெல்லாம் கண்டித்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமைதிப்படை ஆபரேஷன் ஒன்று நடந்து வருகிறதாம். அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாக்கிக் கொண்டு இருப்பதாக கசிந்துள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More : சிறையில் இருந்தே வெற்றி கண்ட சுயேட்சை வேட்பாளர்..!! எந்த தொகுதி..? எத்தனை வாக்குகள் தெரியுமா..?