For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீபிகா படுகோனே கர்ப்பம்.? ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தகவல்.!

09:12 PM Feb 20, 2024 IST | 1newsnationuser7
தீபிகா படுகோனே கர்ப்பம்   ரன்வீர் சிங்   தீபிகா படுகோனே ஜோடி தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தகவல்
Advertisement

பாலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக விளங்கியவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. ஆறு வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2018 ஆம் வருடம் தாலி நாட்டில் வைத்து மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இந்நிலையில் 6 வருடங்களுக்குப் பிறகு இந்த தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தீபிகா படுகோனே தனது கர்ப்ப காலத்தில் இரண்டாவது ட்ரீம்ஸ்டெரில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற 77 வது பாஃப்டா விருது வழங்கும் விழாவில் தனது கர்ப்பமான வயிற்றை மறைப்பதற்காக தீபிகா படுகோனே சேலை கட்டி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

முதன்முதலில் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா திரைப்படத்தில் ரன்வீர் மற்றும் தீபிகா சந்தித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் போன்ற திரைப்படங்களிலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 6 வருடங்களாக டேட்டிங் செய்த இருவரும் கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது தீபிகாவிடம் எப்போது தாய்மை அடைவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் தனக்கும் ரன்வீர் சிங்குக்கும் குழந்தைகள் என்றாலும் மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார். மேலும் தங்களது குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது . சமீபத்தில் இவர் நடித்த ஃபைட்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

English Summary: Ranveer and deepika padukone are expecting their first child.There are news going around about Deepika's pregnancy.

Advertisement