"உலகில் முதல் முறை.." 'டீப்ஃபேக்' வீடியோ மோசடி.! 212 கோடி ரூபாயை இழந்த ஹாங்காங் நிறுவனம்.!
டீப்ஃபேக் வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திடம் 212 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து போலியான வீடியோக்கள் வெளிவந்த நிலையில் முதல்முறையாக பண மோசடியில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அளிக்க செய்திருக்கிறது.
ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு அவரது தலைமை அதிகாரியிடம் இருந்து வீடியோ கான்பரன்சிங் அழைப்பு வந்திருக்கிறது. இந்த வீடியோ கான்ஃபரன்ஸ்ங்கில் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த உரையாடலின் போது பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி உத்தரவின் பேரில் 212 கோடி(25.6 million usd) ரூபாயை நிதி அதிகாரி கூறிய கணக்கிற்கு மாற்றி இருக்கிறார் ஊழியர். இதனைத் தொடர்ந்து அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தொகை மாற்றப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் யார் உத்தரவின் பெயரில் இந்தப் பணப் பரிமாற்றம் நடந்ததாக ஊழியரிடம் விசாரித்துள்ளனர். அப்போது வீடியோ கான்பரன்சிங் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். நிறுவனத்திடமிருந்து வீடியோ கான்பிரன்ஸ் எதுவும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு தான் அந்த நிறுவனம் ஏமாற்றப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
இணையதளங்களின் மூலம் மோசடி செய்யும் நபர்கள் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளை போன்ற போலியான வீடியோக்களை டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியரை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வீடியோ கான்பிரண்ட்ஸில் பங்கு பெற்றவர்களில் நிறுவனத்தின் ஊழியரை தவிர மற்ற அனைவரும் மோசடிக்காரர்களால் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஹாங்காங் காவல்துறை " பண மோசடியில் முதன்முதலாக டீப்ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வீடியோ கான்பிரன்ஸ் அழைப்பில் பங்கேற்ற அனைவரின் பேச்சு மற்றும் உருவம் அவர்களை ஒத்திருந்ததாக இந்த மோசடியில் ஏமாற்றப்பட்ட ஊழியர் தெரிவித்திருக்கிறார். மேலும் வீடியோ கான்பரன்சில் நிதி அதிகாரி போன்று போலியாக தோன்றிய நபர்கள் 15 பணப்பரிவர்த்தனைகளின் மூலம் 212 கோடி ரூபாயை ஹாங்காங் நாட்டிலுள்ள பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்ப உத்தரவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் உலகையே அதிரச் செய்திருக்கிறது.