For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணங்கள் ஏன் கட்டுறாங்க.? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் என்ன.?

05:56 AM Nov 24, 2023 IST | 1newsnationuser4
சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணங்கள் ஏன் கட்டுறாங்க   இதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் என்ன
Advertisement

சுப நிகழ்ச்சிகள் என்றாலே எல்லா வீடுகளிலும் கோவில்களிலும் மாவிலை தோரணங்கள் கட்டாயமாக இருக்கும். இது வெறும் அலங்காரத்திற்காக மட்டும் செய்கின்ற செயல் அல்ல. இதற்குப் பின்பு மருத்துவ மற்றும் அறிவியல் ரீதியான உண்மை இருப்பதாக சாஸ்திரங்களும் அறிவியலும் தெரிவிக்கிறது.

Advertisement

பொதுவாகவே அனைத்து விதமான தாவரங்களும் தங்களது சுவாசத்தின் போது கார்பன் டையாக்சைட்டை உள்ளெழுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இதனால்தான் சுற்றுப்புற சூழல் செழிப்பாக இருப்பதோடு மக்களும் சுவாச பிரச்சனையில்லாமல் இருக்க முடிகிறது. ஆனால் மாவிலைக்கு என்று தனி பண்பு ஒன்று இருக்கிறது. அதாவது மற்ற மரங்கள் மற்றும் செடிகளின் இலைகள் மரத்தோடு இருக்கும்போது தான் கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும்.

ஆனால் மாமரத்தின் இலை மட்டும் தான் மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. எனவே மக்கள் கூட்டம் நிறைந்த சுப நிகழ்ச்சிகளின் போது மாவிலை தோரணங்கள் கட்டப்படுவதால் அவை அந்த சுற்று சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். இதனால் மக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது. மேலும் மூச்சுத் திணறல் சுவாசக் கோளாறு போன்றவையும் தடுக்கப்படுகிறது.

மேலும் மாமரத்தின் நிலைகளில் இருக்கும் கிருமி நாசினி பண்புகள் அதிகமான மக்கள் கூடும் இடங்களில் கிருமி தொற்றுகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. சாஸ்திரங்களின்படி மாமரத்தின் நிலைகளுக்கே எதிர்மறை பண்புகளை அளிக்கும் சக்தி இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதுபோன்ற அறிவியல் மற்றும் சாஸ்திர காரணங்களால்தான் சும்மா நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags :
Advertisement