இரட்டைமலை சீனிவாசன், அப்துல் கலாம் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு...!
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 7-ம் நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, சிந்துவெளி நாகரிகத்தை வெளிபடுத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த சர். ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களுக்குச் சென்னையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும். சிந்துவெளி நாகரிகத்தை வெளிபடுத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த சர். ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களுக்குச் சென்னையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும். அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு அவர்களுக்குக் கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும்
காவேரி மீட்புக் குழுவில் இணைந்து போராடியவரும், விவசாயிகளின் நலன்களுக்காகப் பாடுபட்டவருமான கரூர் சி.முத்துசாமி அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும். திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 7-ம் நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் திங்கள் 9-ம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான தைத் திங்கள் 1-ம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 13ஆம் நாள் வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
மேனாள் சென்னை மாகாண முதலமைச்சர் ப.சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 11ஆம் நாள் சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 7-ம் நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.