டிச.24 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக டிச. 24ஆம் தேதியும் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக இந்த கிறிஸ்துமஸ் விழா உள்ளது. கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகை காலத்தினை முடிவு பெறச்செய்து, 12 நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாக இது கருதப்படுகிறது. இது மட்டுமின்றி, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளித்து, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும் இந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்கள் உள்ள போதிலும், ஏற்கனவே, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. அதேபோல வீடுகளில் அலங்கார விளக்குகள் மற்றும் நட்சத்திரங்களைத் தொங்கவிடப்பட்டு அழகுபடுத்தி வருகின்றனர். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்திற்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 28 ஆம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
Read more ; QR கோடுடன் புதிய பான் கார்டு.. 50 ரூபாயில் வீடு தேடி வரும்.. எப்படி விண்ணப்பிப்பது?