குடிபோதையில் இளம்பெண்ணை ஏமாற்றி உடலுறவு..!! பாஜக எம்பி மகன் மீது பரபரப்பு புகார்..!! நடந்தது என்ன..?
கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனகுடி காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், மைசூரு மாநகரில் உள்ள மகாராஜ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் பல்லாரி தொகுதி பாஜக மக்களவை தொகுதி உறுப்பினர் தேவேந்திரப்பாவின் மகன் ரங்கநாத் என்னை காதலித்தார். கடந்த ஜனவரி மாதம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் தங்கி இருந்தபோது, மது குடித்த போதையில் இருந்த ரங்கநாத், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
இதனால், பாலியல் உறவில் ஈடுபட ஒப்பு கொண்டேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார்” என்று கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ரங்கநாத் மீது இந்திய தண்டனை சட்டம் 420, 417, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, ரங்கநாத் மைசூரு விஜயநகர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், என்னுடன் இருந்த போட்டோ மற்றும் ஆடியோவை வைத்துக் கொண்டு இளம்பெண், என்னிடம் ரூ.15 லட்சம் கொடுக்கும்படி மிரட்டினார்.
அவரின் மிரட்டலுக்கு பணிந்து, எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3,25,500 பணத்தை அவருக்கு அனுப்பினேன். இருப்பினும் ரூ.10 லட்சம் கொடுத்தால் மீண்டும் தொல்லை கொடுக்க மாட்டேன் என்றார். அதை நம்பி பணம் கொடுத்தேன். இருப்பினும் தொல்லை கொடுப்பதுடன் எனது சாதி பெயரை சொல்லி கேவலப்படுத்தியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.