முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கடன் தொல்லை!… அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!… மகள் கண்முன்னே நிகழ்ந்த துயரம்!

09:30 AM Nov 06, 2023 IST | 1newsnationuser3
Advertisement

தெலுங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திராரெட்டி உள்ளார். இவரின் பாதுகாப்பு அதிகாரி பைசல் அலி. இவர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைசல்அலி தனது குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இத்துடன் லோன் ஆப் மூலமும் பல லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் இவரை வீடு தேடி சென்றும், அடிக்கடி போன் செய்தும் கடனை திருப்பி செலுத்தும்படியும் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் பைசல்அலி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அமைச்சரின் பாதுகாப்புக்கு பணிக்காக சீருடையில் சென்றார். இவர் வீட்டிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் பைசல்அலியின் வீட்டுக்கு சென்று கடனை திருப்பி கேட்டதாகவும் அவரது மனைவியும் மகளும் பைசல் அலி பணிக்கு சென்றுவிட்டதாக கூறியதாகவும் தெரிகிறது. தந்தையை தேடி நிதி நிறுவனத்தினர் வந்தது குறித்து தெரிவிக்க அவரது மகள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றார்.

அந்த சமயத்தில் பைசல்அலி, அமைச்சரின் வீட்டருகே உள்ள டீ கடையில் தேநீர் குடித்து கொண்டிருந்தார். உடனே டீக்கடைக்கு வந்த பைசல் அலி மகள் தனது தந்தையிடம் கடன்காரர்கள் காலையிலேயே வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வதாக கூறினார். ஏற்கனவே கடும் மன உளைச்சலில் இருந்த பைசல்அலி, எதிர்பாராத வகையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது மகள் கண்முன்னே தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, நடந்ததை கேட்டறிந்து, அவரது மகளுக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பைசல்அலி கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். தனது மகளின் கண்முன் யாரும் எதிர்பாராமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :
Minister's security officer shot himselfஅமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலைகடன் தொல்லைதுப்பாக்கியால் சுட்டு தற்கொலைதெலுங்கானாமகள் கண்முன்னே நிகழ்ந்த துயரம்
Advertisement
Next Article