காட்டுத்தீ பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!. லாஸ் ஏஞ்சல்ஸை தொடர்ந்து, நியூயார்க்கில் பரவிய தீ!. உதவிக்கரம் நீட்டிய கனடா!
New York: லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன.
காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை (ஜனவரி 10, 2025) நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 7 பேர் காயமடைந்துள்ளனர். தீ மிகவும் கடுமையாக இருந்ததால், 200 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்று காரணமாக ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. நியூயார்க் தீயணைப்புத் திணைக்களம், காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து எச்சரிக்கையாக தீயை அதிகரித்ததாகக் கூறுகிறது.
இது ஒரு பெரிய மற்றும் பரவலான தீயைக் குறிக்கும் அதிகபட்ச அலாரமாகும். தீ விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு பொதுமக்கள் மற்றும் ஐந்து தீயணைப்பு வீரர்கள் அடங்குகின்றனர். புகை மூட்டத்தால் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மூச்சு திணறலுக்கு உள்ளான நிலையில், பலர் இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர். கனடா அரசுக்கு சொந்தமான விமானம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Readmore: ஆண்மை அதிகரிக்க தேனுடன் இதை மட்டும் கலந்து சாப்பிடுங்க..!! இனி அந்த விஷயத்துல நீங்க தான் கில்லி..!!