முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா..? ஆபத்து நெருங்கிருச்சு..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

While the coronavirus outbreak is still not completely eradicated, the next dangerous bacterial infection is said to be spreading rapidly in Japan.
10:55 AM Jul 04, 2024 IST | Chella
Advertisement

கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் முழுவதுமாக விடுபடாத நிலையில், அடுத்த அபாயமான பாக்டீரியா தொற்றானது ஜப்பானில் வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்த பாக்டீரியாவுக்கு ஸ்ட்ரெப்டோக்கால் (streptococcal) என்று பெயர். இது, streptococcal toxic shock syndrome (STSS) வகையை சார்ந்தது. இந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்ட ஒருவருக்கு, 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தவகை பாக்டீரியா, மனிதனின் தொண்டையை தாக்கும். பிறகு உடல் முழுவதும் வேகமாக பரவி உயிரையே எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நோயானது சமீபத்தில் ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளது. இந்த நோய் தாக்கப்பட்ட 100 பேரில் 30 பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

பாக்டீரியாவின் தாக்கம் எப்படி இருக்கும்..?

streptococcal பாக்டீரியாக்கள் மனித தோல் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று தொண்டையை தாக்கும். பிறகு மனித உடலில் சூப்பர் ஆண்டிஜென் திறன் கொண்ட சில நச்சுக்களை உடலில் உருவாக்கும். பிறகு விரைவாக திசுகளை தின்று உறுப்புகளை செயலிழக்க செய்து மனிதனை 48 மணி நேரத்திற்குள்ளாக மரணமடைய செய்யும் என்கிறார்கள். ஆகவே இதனை 'சதைகளை தின்றும் பாக்டீரியா' என்றும் கூறுகின்றனர். இந்தவகை பாக்டீரியாக்கள், எந்த வயதினரையும் தாக்கும் தன்மை கொண்டதாம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள், உடல் உபாதை உடையவர்கள் ஆகியோரை விரைவில் தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அறிகுறி

தொண்டைவலி

கை கால்கள் வலி

உடல் சோர்வு

காய்ச்சல்

சுவாச கோளாறு

போன்ற அடிப்படையான அறிகுறியாக இருந்தாலும், இந்நோய் தாக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள்ளாக உடல் முழுதும் பரவி மரணத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தொண்டைப்புண் இதன் ஆரம்ப அறிகுறியாக உள்ளது.

தடுக்கும் முறை..?

இதில் ஆறுதல் தரும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த வகை பாக்டீரியாக்கள் நேரடியாக மனிதனுக்கு மனிதன் பரவும் வாய்ப்பு குறைவு. நோய் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வதுடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆண்டிபயாடிக்ஸ் மாத்திரைகள எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் நோயில் இருந்து குணமடையலாம். மேலும், உணவு விஷயத்திலும் கவனம் தேவை. அடிக்கடி கை கால்களை சுத்தம் செய்துக்கொள்வதாலும், சுத்தமான சுகாதாரமான உணவு எடுத்துக்கொள்வதாலும் பாக்டீரியாவை தடுக்கலாம். இந்தியாவில் இந்த வகை பாக்டீரியாவின் தாக்கம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும், வருமுன் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

Read More : ”நீட் குறித்து விஜய் பேசியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை”..!! விழாவில் கலந்து கொண்ட மாணவியின் தாய் பரபரப்பு பேட்டி..!!

Tags :
Jappansteptococcalvirusபாக்டீரியா
Advertisement
Next Article