For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனதை பதறவைக்கும் உடற்பயிற்சி மரணங்கள்.! தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்.!

06:50 AM Nov 25, 2023 IST | 1newsnationuser4
மனதை பதறவைக்கும் உடற்பயிற்சி மரணங்கள்   தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
Advertisement

உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அத்தியாவசியமான ஒன்று. மருத்துவர்களும் அனைவரையும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றனர். ஆனாலும் தற்காலங்களில் நடைபெறும் உடற்பயிற்சி தொடர்பான மரணங்கள் உடற்பயிற்சியின் மீது புதுவித பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் மரணம் அடையும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணங்கள் என்ன இவற்றைத் தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம் .

Advertisement

பொதுவாக கரோனரி தமனி என அழைக்கப்படும் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கலாம். இது கவனிக்கப்படாமல் விட்டிருக்கலாம். இது போன்ற அடைப்புகள் உடல் உழைப்பின் போது மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடல் பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒருவர் உடற்பயிற்சி துவங்குவதற்கு முன்பு மருத்துவரிடம் சென்று ஆலோசனையும் பரிசோதனைகளும் செய்து கொள்வது மிகவும் அவசியம்

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதற்கு நீரிழப்பு முக்கிய காரணமாக மருத்துவர்கள் கூறப்படுகிறது. உடற்பயிற்சியின் போது உடலில் நீர்ச்சத்து நல்ல அளவில் இருக்க வேண்டும். இந்த அளவு குறையும் போது இதயம் அதிகமான அழுத்தத்தை உணரும். இதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே உடற்பயிற்சிக்கு செல்லும் போது அல்லது உடற்பயிற்சிக்கு தயாராகும் போது நம் உடலில் நீரின் அளவு சரியான அளவில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஓய்வு நேரங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதும் அவசியம்.

பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவற்றின் சமநிலை நமது இதயம் சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமாகிறது. இந்த எலக்ட்ரோலைட்டுகளின் சம அளவில் சிறிது மாறுபட்டாலும் அது இதயத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நமது உடலில் பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் அளவு சமமாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சிக்கு செல்வோர் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை தங்கள் டயட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம் மேலும் முறையான தூக்கம் மற்றும் ஓய்வு ஆகியவையும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.

Tags :
Advertisement