மரண அடி!. ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் விளாசிய புஜாரா!. லாராவின் சாதனையை சமன்செய்து அசத்தல்!
Pujara: 2024-25ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சீசனில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் புஜாரா, மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ராஜ்கோட்டில் சத்தீஸ்கர்-செளராஷ்டிரா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சத்தீஸ்கர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 578 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய செளராஷ்டிரா அணி 13 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதன்பின் களமிறங்கிய புஜாரா வழக்கம் போல் ஒரு பக்கம் நங்கீரமிட்டு நின்றார்.
அதாவது 197 பந்துகளில் ரஞ்சியில் தந்து 25வது சதத்தை விளாசினார், அதன்படி, முதல்தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களையும் கடந்தார். மேலும், இதனை தொடர்ந்து புஜாரா தொடர்ந்து அதிரடி காட்டிய நிலையில் தன்னுடைய 18ஆவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் புஜாரா 3வது இடத்தில் இருக்கிறார். சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் தலா 81 சதங்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 68 சதங்களுடன் 2வது இடத்திலும் இருக்கின்றனர்.
முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர் 25,834 ரன்களுடன் முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 25,396 ரன்களுடன் 2வது இடத்திலும், ராகுல் டிராவிட் 23,794 ரன்களுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர். இவர்களுக்கு பின் 21,016 ரன்களுடன் புஜாரா 4வது இடத்தில் இருக்கிறார். இதன் மூலம் சதங்களில் மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை (65) முந்தியுள்ளார்.
கடந்த 2005 முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான புஜாரா, 2010-ல் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 7,195 ரன்களை விளாசியவர் புஜாரா. ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ச்சியாக 2 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு காரணமாக இருந்தவர். இளம் வீரர்களை கொண்டு வருவதற்காக புஜாரா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
Readmore: தந்தை பெயருக்கு பதில் கணவர் பெயர்..!! ஆதார் கார்டில் மாற்றுவது எப்படி..? ரொம்பவே ஈஸியான டிப்ஸ்..!!