முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுரங்க குழிக்குள் பிணைக் கைதிகளின் சடலம்..!! கதிகலங்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்..!!

02:56 PM Dec 25, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது திடீர் போர் தாக்குதல் தொடுத்தது. தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,140 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும், அக்.7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின்போது, இஸ்ரேலில் இருந்து 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்ததாகவும், அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிணைக் கைதிகளில் 105 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலின் பதில் தாக்குதலில் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் பலர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அக்டோபர் 7ஆம் தேதி பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டவர்களில், 5 பேரின் சடலங்கள், ஹமாஸ் பதுங்கு குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
இஸ்ரேல்பாலஸ்தீனம்பிணைக் கைதிகள்ராணுவம்
Advertisement
Next Article