For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கண்கலங்கிய தல தோனி!... இதுதான் கடைசியா!... பிளே ஆஃபை இழந்ததால் சோகம்!…

06:20 AM May 19, 2024 IST | Kokila
கண்கலங்கிய தல தோனி     இதுதான் கடைசியா     பிளே ஆஃபை இழந்ததால் சோகம் …
Advertisement

MS Dhoni: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் கோலி - டுபிளஸிஸ் ஜோடி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 ஓவரின் 4 ஆவது பந்தை சான்ட்னர் வீச, டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் விராட் கோலி. 29 பந்துகளில் 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்தபோது ஆட்டமிழந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 37 சிக்சர்களுடன் விராட் கோலி அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளார்.

Advertisement

இதையடுத்து, 39 பந்துகளில் தலா 3 சிக்சர், பவுண்டரியுடன் ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் 54 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய படிதார், கிரீன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது.

ஆர்சிபிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி வெற்றி பெற 219 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளே ஆஃப் செல்வதற்கு நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை 201 எடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால், மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட், யஷ் தயாளிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல் சொற்ப ரன்களில் டேரில் மிட்செல் அவுட்டாகி வெளியேற ஒருபுறம் ரச்சின் ரவீந்திராவுடன் கூட்டணி சேர்ந்த ரகானே அதிரடியை காட்டினார். இருப்பினும் ரச்சின் ரவிந்திரா 37 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தை சிக்சருக்கு தோனி அனுப்பினார். 2 ஆவது பந்தில் அவர் ஆட்டமிழக்க, அடுத்த 4 பந்துகளில் ஒரேயொரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஆர்சிபி பவுலர் யஷ் தயாள். இதையடுத்து சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த தோல்விக்கு பின் தோனி ஓரமாக சென்று இருக்கையில் அமர்ந்து கண்கலங்கினார். அந்த காட்சி நேரலையில் காட்டப்பட்டது. அதை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் தன்னால் சிஎஸ்கே அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்ற சோகத்தில் தோனி கண் கலங்கியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Readmore: நள்ளிரவில் பயங்கரம்!… தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!… 2 பேர் காயம்!

Advertisement