முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

" நீ பகுமானமா ஹெலிகாப்டரில் வர நாங்க '5,000 $/-' பில் கட்டணுமா."? கடுப்புடன் செலவை பகிர்ந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம்.!

05:39 PM Jan 13, 2024 IST | 1newsnationuser7
Advertisement

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். கடந்த வாரம் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் சர்வதேச டி20 மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Advertisement

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் டேவிட் வார்னர். இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்பாக சிட்னி மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வருகை புரிந்தார் டேவிட் வார்னர். இந்த நிகழ்வு அனைவரிடமும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நேற்றைய தினம் சிட்னி சிக்ஸர் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையில் சிட்னி தண்டர்ஸ் அணி விளையாடியது. தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொண்ட டேவிட் வார்னர் அங்கிருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தரையிறங்கினார். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தனி ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி குடித்த நேரத்தில் மைதானத்திற்கு வந்து இறங்கினார் டேவிட் வார்னர்.

இந்த ஹெலிகாப்டருக்கு 5000 அமெரிக்க டாலர்கள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹெலிகாப்டர் வாடகை பணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணி நிர்வாகம் பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடும் 19 ரன்கள் வித்தியாசத்தில் அவரது அணி சிட்னி சிக்ஸர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
5000 USDBBL 2024cricket australiadavid warnerHelicopter Entry
Advertisement
Next Article