For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தைகளுக்கு இரும்புச்சத்தை அதிகரிக்கும் பேரீச்சம்பழம் சிரப்..! வீட்டிலேயே எப்படி செய்யலாம்.!?

03:11 PM Jan 30, 2024 IST | 1newsnationuser5
குழந்தைகளுக்கு இரும்புச்சத்தை அதிகரிக்கும் பேரீச்சம்பழம் சிரப்    வீட்டிலேயே எப்படி செய்யலாம்
Advertisement

பொதுவாக குழந்தை பிறந்தது முதல் ஒரு குறிப்பிட்ட வயது ஆகும் வரை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலில் மிகவும் குறைவாகவே இருந்து வரும். இதனாலே குழந்தைகளுக்கு சாதாரணமாக நோய் தொற்று ஏற்பட்டாலும் மிகப் பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு நோய் தொற்று குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை தர வேண்டும்.

Advertisement

பொதுவாக பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானிய வகைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை தினமும் குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் ஒரு சில குழந்தைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பான இந்த பேரிச்சம் பழம் சிரப்பை வீட்டிலேயே செய்து கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.

பேரிச்சம்பழம் சிரப் செய்முறை: முதலில் அரை கிலோ பேரிச்சம்பழத்தை கொட்டைகள் நீக்கி சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பேரிச்சம் பழம் வேகும் அளவிற்கு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக குழையும்படி வேக விட வேண்டும். பின் வேக வைத்த பேரிச்சம்பழத்தை ஒரு பாத்திரத்தில் நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து பாகு பதம் வரும் அளவிற்கு கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பேரிச்சம்பழம் சிரப் வீட்டிலேயே தயார். இதை குழந்தைகளுக்கு பாலில் கலந்து தினமும் கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Tags :
Advertisement