பயனர்களே..!! இனி வாட்ஸ் அப்பில் இது கட்டாயம்..!! மெட்டா நிறுவனம் அதிரடி..!! செம அப்டேட்..!!
மெட்டா நிறுவனமானது, வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பல்வோறு நாடுகளின் விதிகளுக்கு ஏற்ப வாட்ஸ்அப்பை பாதுகாப்பான செயலியாக மாற்றும் வகையில், பயனர்களின் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இது தற்போது சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. WeBetainfo தகவல்படி, டெக்சாஸ் போன்ற பல்வேறு அமெரிக்க மாநிலங்களில் சமீபத்திய சட்ட மாற்றங்களுக்கு இணங்க இது செய்யப்படுகிறது.
அந்நாட்டில் உள்ளவர்கள் எந்த ஆன்லைன் சேவையையும் பயன்படுத்தத் தொடங்கும் முன் தங்கள் வயதை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று கேட்கும் பாப்-அப் மெசேஜ் செயலியில் காண்பிக்கும். சமீபத்திய சட்ட விதிமுறைகளின் கீழ் இந்த டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வயதை அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் 15 வயதாக நிர்ணயித்துள்ளது.
எனவே, நீங்கள் சரியான வயதை உள்ளிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், அந்தத் தரவை மீண்டும் திருத்தவோ மாற்றவோ முடியாது. இருப்பினும் இந்த தரவுகள் பிறந்த தேதி தரவுகள் எதுவும் யாருக்கும் காண்பிக்கப்படாது. இது ஒழுங்குமுறைத் தேவைகளுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. பயனர்களின் தனியுரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் மெட்டா நிறுவனம் உறுதியளிக்கிறது.
Read More : ஜூலை 15 முதல் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 கிடைக்கப்போகுது..!! முதல்வர் முக.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!