Darling | ’பெண்களின் சம்மதம் இன்றி ”டார்லிங்” என அழைத்தால் அது குற்றம்தான்’..!! நீதிமன்றம் அதிரடி..!!
பெண்களின் சம்மதம் இன்றி டார்லிங் என அழைப்பது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அந்தமானில் உள்ள வெபி கிராமத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலரை ஜனக் ராம் என்ற நபர் “டார்லிங் அபராதம் விதிக்க வந்தாயா?” என கேட்டுள்ளார். இதையடுத்து மாயபந்தர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு விசாரணைக்கு வந்த நிலையில், ஜனக் ராம் மீது குற்றம் சுமத்தப்பட்டு 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தின் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜனக் ராம் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் காவல்துறையினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக உள்ளது என்று தெரிவித்து முந்தைய நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்களை டார்லிங் என அழைக்க முடியாது. இத்தகைய செயல் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலில் சேரும் என தெரிவித்து நீதிபதி தண்டனையை உறுதிப்படுத்தினார். ஆனால், 3 மாத சிறைத் தண்டனையை 1 மாதமாக குறைத்து உத்தரவிட்டார்.
Read More : PM Modi | மேடையில் பிரதமருடன் கைகோர்க்க போகும் 2 முக்கிய புள்ளிகள்..!! அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்..!!