முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீங்கள் போனில் வைத்திருக்கும் இந்த செயலிகளில் ஆபத்தான வைரஸ்..!! ஆண்ட்ராய்டு பயனர்களே முக்கிய எச்சரிக்கை..!!

Reports suggest that Android phones and tablets are infected with a dangerous virus called Necro Trojan.
07:43 AM Sep 26, 2024 IST | Chella
Advertisement

டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் சிக்கிக் கொண்டு பலரும் பணத்தை இழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம். சைபர் மோசடி நபர்களின் வலையில் சிக்காமல் இருக்க, ஆண்ட்ராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

தற்போது, 11 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகள் நெக்ரோ ட்ரோஜான் (Necro Trojan) எனப்படும் ஆபத்தான வைரஸ் ஊடுருவி உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த வைரஸ் அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் மற்றும் கேம் மோட்கள் மூலம் தொலைபேசியில் நுழைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ், 2019இல் முதன்முறையாகக் காணப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் வந்துவிட்டது.

இந்த வைரஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் பரவுகிறது என்பதால் ஆண்ட்ராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொலைபேசியில் நுழைந்தால், ​​அது பல ஆபத்தான கோப்புகளை பதிவிறக்கி, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பின்னர் அது உங்களுக்குச் சொல்லாமலேயே விளம்பரங்களைக் காட்டும் கருவியாக மட்டுமின்றி, போனை சேதப்படுத்தும் அல்லது ஹேக் செய்ய உதவும் பிற ஆபத்தான வைரஸ்களைப் பரப்ப உதவும் கருவியாக மாறும்.

ஆபத்தான வைரஸை பரப்புவதில் குறிப்பாக இரண்டு செயலிகள் அதிகம் உதவியதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. அவை Wuta Camera மற்றும் Max Browser ஆகிய செயலிகளாகும். Wuta Camera என்பது மிகவும் பிரபலமான கேமரா செயலி. இது சுமார் 10 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட மேக்ஸ் உலாவியும் (Max Browser ) அகற்றப்பட்டது. இவை தவிர, Spotify Plus, WhatsApp, Minecraft மற்றும் பிற செயலிகளின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. ஹேக்கர்கள் இந்த மாற்றியமைக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்தி வைரஸைப் பரப்புகிறார்கள்.

ஆண்ட்ராய்டு வைரஸ்களைத் தவிர்க்க, கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டும் செயலியை பதிவிறக்கம் செய்வதோடு, உங்கள் மொபைலில் கூகுள் பிளே ப்ரோடெக் அம்சத்தை ஆன் செய்து வைத்திருக்கவும். எந்தவொரு செயலியையும் பதிவிறக்கும் முன், அதன் மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகளைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More : சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டியிருக்கலாம்..? பக்தர்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
செயலிகள்சைபர் கிரைம் மோசடிபிளே ஸ்டோர்
Advertisement
Next Article