’ஆண்களின் விந்தணுவுக்கு ஆபத்து’..!! ’உட்காரும் போது இனி இந்த தவறை செய்யாதீங்க’..!!
சிலருக்கு கால் மேல் கால் போட்டு உட்காருவது வசதியாக இருக்கும். இவ்வாறு உட்காருபவர்களுக்கு ஒருவிதமான நிம்மதியைக் கொடுக்கும். உட்கார்ந்து இருக்கும் போது, பலர் ஓய்வெடுப்பதற்காக வசதியாக உட்காருகிறார்கள். பலர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பார்கள்.
குறிப்பாக பெண்கள் இப்படி உட்காருவதை அதிகம் விரும்புவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மிகவும் வசதியாக உணர்கிறார்கள். ஆனால், அப்படி உட்காருவது உடலுக்குப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இது பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குவதாக கூறப்படுகிறது.
ஆண்கள் கால் மேலே கால் போட்டு உட்காருவதால் ஏற்படும் தீமைகள் :
* கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் ஆண்களுக்கு டெஸ்டிகுலர் வெப்பநிலை உயர்கிறது.இது விந்தணு எண்ணிக்கையில் பாதகமான விளைவை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
* கால்களை குறுக்காக போட்டு உட்காருவது எலும்புகளை சேதப்படுத்தும். குறிப்பாக, முதுகெலும்பில் வலியை ஏற்படுத்துகிறது. மேலும், இடுப்பு எடையும் வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
* கால் மேல் கால் போட்டு உட்காருவதும் வயிற்றில் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும். இது செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டாக்கும். வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலி கூட அதிகரிக்கும்.
* மேலும், இப்படி உட்காருவதால், இது உங்கள் கால்களில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. கால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
* கால் மேல் கால் போட்டு அமர்வதால் தசை சமநிலையின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக இடுப்பு பகுதியில் சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பழக்கத்தால் பலருக்கு முதுகுவலி வரத் தொடங்குகிறது.
Read More : ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!