தேர்தல் பணி!... உயிருக்கே ஆபத்து!… இந்த விஷியத்தில் கவனக்குறைவு கூடாது!… சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Heat: கோடையின் வெப்ப அலை வீசும் காலத்தில், சிலவற்றில் நாம் கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) மட்டுமின்றி, இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தல் பணியோ அல்லது சாதாரண பணியோ எதுவாக இருந்தாலும், மதிய நேர வெயிலில் சுற்றுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
வெயிலின் தாக்கத்தால் திடீரென தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு ஞாபகம் இழப்பது, நெஞ்சு எரிச்சல், மயக்கம், திடீரென வியர்ப்பது போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இது ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) அல்லது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது போன்றவை ஏற்பட்டால், சாதாரணமாக நினைத்து கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்தாகும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெப்ப அலை பாதிப்பு குறித்து பொதுவான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளது. பயணத்தின் போது கட்டாயம் குடிநீர் எடுத்துச் செல்லவும். உடலில் நீர் பற்றாக்குறையை போக்க போதிய நீர் குடிக்க வேண்டும். நீர் பற்றாக்குறையை போக்க ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Solution) கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும். வெளியில் செல்லும் போது பருத்தி ஆடை, காலணிகளை அணிய வேண்டும்.
வெறும் காலில் வெயிலில் செல்வதை தவிர்க்கவும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். வெயிலில் பாதித்தவர்கள் ஆடையின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும். குழப்பமான மனநிலையில், சோர்வாக உள்ளவர்களிடம் அவர்களின் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.
அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் அடைந்தால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சிகிச்சையில் சேர்க்கவும். மிகவும் சோர்வாக இருந்தால் அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனை சென்று ஓ.ஆர்.எஸ் வாங்கி குடித்து, மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
Readmore: கர்ப்பிணிகளே!… பனிகுட நீர் அபாயங்களை இரட்டிப்பாக்கும் வெப்ப அலை!… என்ன செய்யவேண்டும்?