அபாய கட்டம்..!! 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து..!! பாதுகாப்பான இடங்களுக்கு போங்க..!! அமைச்சர் வேண்டுகோள்..!!
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் சென்ட்ரலில் இருந்து புறப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மைசூர், கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.