ஆபத்து வந்துருச்சு..!! தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம்..!! சாதாரணமா நினைக்காதீங்க..!! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!!
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். முழு ஊரடங்கு, தடுப்பூசி மூலம் இந்த கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது.
அதாவது, தற்போது ஒமைக்ரானின் துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும் என்றும் ஆனால், மக்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். உலகளவில் அதிகம் பரவும் JN1 வகை கொரோனா தமிழ்நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.