அடடே..!! வெட்டிவேரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? முகம் அழகாக இதை எப்படி பயன்படுத்த வேண்டும்..?
வெட்டிவேர் பயன்படுத்துவதன் மூலம் நமது உடலில் உள்ள கபம் பித்தம் விலகி உடல் ஆரோக்கியமாகு. வெட்டிவேர் இயற்கை மூலிகை தன்மை கொண்டது. இதை பயன்படுத்தினால், உடலுக்கு எண்ணற்ற சக்தியை தருகிறது. அந்த வகையில் வெட்டிவேரின் எண்ணையைக் கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண்கள் மீது தடவ வேண்டும். இப்படி செய்வதால், அந்த காயம் விரைவில் மறைந்து விடும்.
இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து குளிக்கலாம். வெட்டிவேருடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட்டால் முகப்பருக்கள் நீங்கி முகம் அழகாக மாறும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். பருக்கள் மறைந்தாலும் ஒரு சிலருக்கு பருக்கள் இருந்த தழும்புகள் மட்டும் போகாது. இதற்கு வெட்டிவேரை சிறு துண்டுகளாகி வெந்நீரில் போட்டு ஒரு நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.
பின்னர், மறுநாள் அதை நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள பருக்களின் வடுக்கள் மறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெட்டிவேரை அரைத்து சீகக்காய் உடன் கலந்து தலையில் தேய்த்து குளித்து வருவதன் மூலம் தலையின் உள்ள பித்தங்கள், பொடுகு தொல்லை நீங்கி தலைமுடி நன்றாக வளரும்.