முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடடே..!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு திறமையா..? பதக்கம் வென்ற நிவேதா பெத்துராஜ்..!! எந்த விளையாட்டில் தெரியுமா..?

04:01 PM Jan 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Advertisement

’சங்கத்தமிழன்’, ‘ஒருநாள் கூத்து’, ‘திமிரு பிடிச்சவன்’, ‘பொன் மாணிக்கவேல்’ போன்றப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். குறிப்பாக, ‘ஒருநாள் கூத்து’ படத்தில் ‘அடியே அழகே’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ’மிஸ் இந்தியா அழகி’ பட்டத்தை வென்ற இவர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார்.

நடிப்பு, மாடலிங் மட்டுமல்லாது இவர் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ’ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங் பயிற்சியில்’ கலந்து கொண்டு அசத்தினார். இந்நிலையில், பேட்மிண்டன் போட்டியிலும் நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார். டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், நிவேதாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
சினிமா நடிகைநிவேதா பெத்துராஜ்பதக்கம்பேட்மிண்டன்விளையாட்டு
Advertisement
Next Article