அடடே..!! இப்படியும் கூட வாக்களிக்கலாமா..? வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க..!!
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பூத் ஸ்லிப் வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை (Election Photo Identity Card) பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPIC அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
12 ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- பான்கார்டு
- ரேஷன் கார்டு
- பாஸ்போர்ட்
- புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
- புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை
- எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
- அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்
- வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக்
- மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
- தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
இதற்கிடையே, பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடி விவரம் இடம் பெற்றிருக்கும். தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் ஸ்லீப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை வாக்காளர் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.
Read More : ரூ.5,000 முதலீடு செய்தால் ரூ.3,56,000 கிடைக்கும்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!!