பைக்கை திருடிய தலித் இளைஞர்..!! மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய ஊர் மக்கள்..!! வைரல் வீடியோ உள்ளே..!!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் ஷ்ரவன் மேக்வால் என்ற தலித் இளைஞர் மீது பொதுமக்கள் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி 10ஆம் தேதி குடமலானி காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த தலித் இளைஞர், பைக் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதையடுத்து, உள்ளூர் மக்கள் அவரை ஒரு மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து கொடூரமாக தாக்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வழக்கு குறித்து பேசிய காவல் நிலைய அதிகாரி (SHO) முக்தா பரீக், இளைஞர் மேக்வாலின் புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பார்மர் காவல் கண்காணிப்பாளர் (SP) நரேந்திர சிங் மீனாவின் கூற்றுப்படி, ”மேக்வால் முன்பு பைக்கைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். ஆனால், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்த பிறகு தற்போது தாக்குதல் நடந்துள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது” என்றார்.
Read More : தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! நாளை இந்த 3 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை..!!