முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என் வாழ்க்கை சீரழிந்து போக அப்பா தான் காரணம்..!! பகீர் கிளப்பிய Vanitha Vijaykumar..!!

01:21 PM Feb 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

Vanitha Vijaykumar | நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன்னுடைய அப்பாவான விஜயகுமாரால் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனது என்றும் அவருடைய பிள்ளைகளில் நான் மட்டும்தான் அவருடைய பேச்சை கேட்டேன். ஆனால் அவர் என்னை பற்றி பேசவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

வனிதா விஜயகுமார் தன்னுடைய அப்பா விஜயகுமார் குறித்து அளித்திருந்த பேட்டியில், “என்னுடைய அப்பா சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய மகள்கள் எப்படி என்று ஒவ்வொருவர் பேரையும் சொல்லி இருந்தார். அதில் கவிதா, அனிதா, அருண் விஜய், அடுத்ததாக என் பெயரை சொல்லாமல் பிரீத்தா, ஸ்ரீதேவி என்று பேசி இருக்கிறார். நான் அந்த வீடியோவை குறைந்தது 10 முறையாவது பார்த்திருப்பேன். காரணம் என்னுடைய அப்பா என்னுடைய பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என் பெயரை தவிர மிச்சம் உள்ள எல்லார் பெயரையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் வேண்டுமென்றால் என்னை பிள்ளை இல்லை என்று சொல்லலாம், என் பெயரை பேசாமல் விடலாம். ஆனால் உலகம் அதை சொல்லாது. நான் எப்போதும் அவருடைய பிள்ளை தான். நல்லவேளையாக எனக்கு கல்யாணம் முடிந்த புதிதில் நான் என்னுடைய பெயரை என்ன மாதிரி குறிப்பிட வேண்டும் என்று கேட்டபோது நான் வனிதா விஜயகுமார் என்று சொல்லிவிட்டேன். அதனால் தான் இப்போதும் எப்போதும் என்னுடைய பெயர் அதுவாகவே இருக்கிறது. ஒருவேளை நான் முதல் கல்யாணம் முடியும்போது வனிதா ஆகாஷ் என்று வைத்திருந்தால் தொடர்ந்து எத்தனை முறை என்னுடைய பெயர் மாறியிருக்கும்..?

அதோடு உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய அப்பா பேச்சை கேட்ட பிள்ளை என்றால் அது நான் மட்டும்தான். அவரால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு. என்னுடைய வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும். அவருடைய பேச்சை கேட்டதால் தான் என்னுடைய வாழ்க்கையை இந்த நிலைமைக்கு மாறியிருக்கிறது” என்று பேசியிருந்தார்.

Read More : ’மகன் வேண்டாம்’..!! ’நீங்களே போதும்’..!! தாமரை சின்னத்தில் போட்டியிடும் OPS..!! பாஜகவின் பிளான் என்ன தெரியுமா..?

Advertisement
Next Article