முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை : ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்..!!

D. Krishnakumar has been appointed as the Chief Justice of Madras High Court on Tuesday.
04:38 PM Jul 16, 2024 IST | Mari Thangam
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 65 நீதிபதிகள் என மொத்தம் 66 நீதிபதிகள் பணியாற்றி வந்தனர். இத்தகைய சூழலில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா கடந்த மே 23 ஆம் தேதியுடன் (23.05.2024) பணி ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள இரண்டு நீதிபதி இடங்களுக்கு புதிய நீதிபதிகள் இன்று நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி, சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

Read more ; ஷாருக்கான் படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன்..!! – ரசிகர்கள் உற்சாகம்

Tags :
Chief Justice of Madras High CourtD. Krishnakumar
Advertisement
Next Article