For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் சோதனை - இனி கட்டணம் தேவையில்லை..!

06:10 AM May 01, 2024 IST | Baskar
கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர்  ரப்பர் குழாய் சோதனை   இனி கட்டணம் தேவையில்லை
Advertisement

கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகியவற்றை ஆய்வு செய்ய இனி கட்டணம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். ரெகுலேட்டர் இயக்கத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதை ஏஜென்சி ஊழியர்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்வர். அதற்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இனி சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே இலவசமாக சோதனை செய்து தங்களின் மொபைல் போனை செயலியில் பதிவு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் பேசுகையில், "ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகியவற்றின் பாதிப்பு குறித்து வாடிக்கையாளர்கள் யாரும் தகவல் தருவதில்லை. இதனால் ஏற்படக் கூடிய விபத்துகளைத் தவிர்க்க, தற்போது டெலிவரி ஊழியர்கள் உதவியுடன் ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொபைல் போன் செயலியில் வாடிக்கையாளரின் சிலிண்டரில் எந்த தேதியில் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் பொருத்தப்பட்டது என்பது உள்ளிட்ட சிலிண்டர் தொடர்பான அனைத்து தகவலும் இருக்கும். இதை அடிப்படையாக வைத்து, ரப்பர் குழாய் மாற்றுவது உள்ளிட்டவை இனி, எளிதாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Read More: BJP | “வீடியோ தயாரிப்பதில் பாஜகவினர் கில்லாடிகள்…” காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சர்ச்சை பேச்சு.!!

Tags :
Advertisement