முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Alert: இன்று & நாளை 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...!

Cyclonic winds gusting to 55 kmph today & tomorrow... Fishermen advised not to venture into the sea
06:05 AM Jan 03, 2025 IST | Vignesh
Advertisement

தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் நெல்லை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். வரும் 4, 5, 6-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வரும் 7, 8-ம் தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
rain alertRain notificationTn Rainதமிழ்நாடு
Advertisement
Next Article