முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Cyclone | தமிழ்நாட்டை ஒட்டி உருவாகும் ’ரிமால்’ புயல்..? கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை..!!

07:17 AM May 22, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவடைந்து, இன்று (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும், இந்தப் புயல் சின்னம் வடகிழக்கு திசையில் நகர்ந்து, மே 24ஆம் தேதி காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மையம்கொண்டு வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

இந்தப் புயல் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை கனமுதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (மே 22) கர்நாடக, கேரள கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை கேரள கடலோரப் பகுதி, குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதி, தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்புமாறும்’ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை ஒட்டி உருவாகும் புயல் சின்னம், நாளை மறுநாள் (மே 24) புயலாக மாறும்போது அதற்கு 'ரிமால்' என்று பெயர் சூட்டப்படும் என்று வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம் நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. வடகிழக்கு நோக்கி புயல் நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

Read More : ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கலாம்..!! சூப்பர் அம்சங்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!!

Advertisement
Next Article