முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை - மசூலிப்பட்டினம் இடையே "மிக்ஜாம்" புயல் கரையை கடக்கும்…! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

09:41 AM Dec 01, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

"மிக்ஜாம்" புயல் சென்னைக்கு வடக்கே ஆந்திரா பகுதியில் கரை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு.

Advertisement

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது மாறியுள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுப்பெறும். அதனைத்தொடர்ந்து புயல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை சென்னை - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் சென்னையிலிருந்து 800 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 700 கி.மீ கிழக்கே தற்போது மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.

மேலும் டிசம்பர் 4ஆம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, ஆனால் இது புயலாக கரையை கடக்குமா, தீவிர புயலாக அல்லது மிக தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்குமா என்பது குறித்த கேள்விக்கு, புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
chennai rainCyclone "Miqjam" will make landfall between Chennai and Masulipatnam...! Meteorological Center information..!CycloneMichaung.miqjam cycloneசென்னை - மசூலிப்பட்டினம்புயல்மிக்ஜாம் புயல்
Advertisement
Next Article