மிக்ஜாம் புயல்: ஆந்திரா மாநில முதல்வருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி..! உதவிகள் செய்வதாக உறுதி…
மிக்ஜாம் புயல் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி தெற்கு ஆந்திராவில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக கனமழையானது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் நிலையில், இந்த மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.
இந்த உரையாடலின் போது மிக்ஜாம் புயல் தொடர்பாக ஆந்திரா மாநிலத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. மேலும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளதா, இல்லையெனில் மத்திய அரசிடம் உதவி தேவைப்பட்டால், தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் NDRF உள்ளிட்ட அனைத்து விதமான குழுக்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.