முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு...! தமிழக அரசுக்கு ரூ.944.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்..!

Cyclone Fenchal impact...! Central government approves release of Rs.944.80 crore to Tamil Nadu government
05:46 AM Dec 07, 2024 IST | Vignesh
Advertisement

தமிழ்நாட்டில் 2024 ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசுக்கு உதவும் வகையில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (எஸ்.டி.ஆர்.எஃப்) மத்திய அரசின் பங்கின் இரண்டு தவணைகளையும் சேர்த்து ரூ.944.80 கோடியை தமிழக அரசுக்கு விடுவிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தணிப்பதில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது.ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழு (ஐஎம்சிடி) அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்களின் மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு, உரிய நடைமுறைகளின்படி, பேரழிவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், நடப்பாண்டில் 28 மாநிலங்களுக்கு ரூ .21,718.716 கோடிக்கும் கூடுதலாக ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் 26 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14878.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 18 மாநிலங்களுக்கு ரூ.4808.32 கோடியும், 11 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (எஸ்.டி.எம்.எஃப்) ரூ.1385.45 கோடியும், 7 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (என்டிஎம்எஃப்) ரூ. 646.546 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.நிதி உதவியைத் தவிர, வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
central govtCyclone fundrelief fundTamilnaduசென்னைதமிழ்நாடுதமிழ்நாடு அரசுமத்திய அரசு
Advertisement
Next Article