சென்னையில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்..? பாதிப்பு பயங்கரமா இருக்கும்..? வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!
வங்கக் கடலில் உருவாகும் புயல், சென்னையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (நவ.21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், நாளை மறுநாள் (நவ.23) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புயல் சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளனர். அதாவது, வங்கக்கடலில் இன்று உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறும்.
இது அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக வலுப்பெற்றால் அதற்கு ஃபெங்கல் என பெயரிடப்படும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று எங்கெங்கு கனமழை பெய்யும்..?
இன்று (நவ.21) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவாரூர், நாகை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மாதந்தோறும் ரூ.12,000-க்கு மேல் வருமானம் பெற வேண்டுமா..? அப்படினா இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!