For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காஃபியில் சயனைடு விஷம்..!! மருமகளை தீர்த்துக் கட்டிய கணவன், மாமியார்..!! வெளியான அதிர்ச்சி காரணம்..!!

The police have arrested 4 people, including her husband and mother-in-law, who allegedly poisoned her daughter-in-law's coffee and killed her.
08:04 AM Sep 02, 2024 IST | Chella
காஃபியில் சயனைடு விஷம்     மருமகளை தீர்த்துக் கட்டிய கணவன்  மாமியார்     வெளியான அதிர்ச்சி காரணம்
Advertisement

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா (50). இவருடைய மனைவி யாஸ்பின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இம்ரான், வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது - நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஆனால், முதலில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு வீட்டாரும், பின்னர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 2021 ஜூலை 15ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், மாமியார் யாஸ்பினுக்கும், மருமகள் ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூன் 23ஆம் தேதி மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன் இறந்து கிடந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், காபியில் ஆஷிகாவுக்கு சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், வரதட்சனையாக ரூ.20 லட்சம் கேட்டு தராததால் இந்தக் கொடூர செயலில் ஆஷிகாவின் மாமியாரும் ஈடுபட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாமியார் யாஸ்பின், கணவர் இம்ரான், முக்தார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே, நகைக் கடையில் சயனைடு விஷம் வாங்கிக் கொடுத்த யாஸ்பின் குடும்ப நண்பரான உதகையை சேர்ந்த காலிப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Read More : கனமழை, வெள்ளம்..!! தமிழக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

Tags :
Advertisement